Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாக்களிப்பதற்காக மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது துப்பாக்கி சூடு!

புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது இரவு 11.45 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச பேருந்தை மரங்களை வீதிக்கு குறுக்காக போட்டு தடுத்து நிறுத்திய பின்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் சென்றிருந்தார்.
தந்திரிமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments