Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடு முவதும் வலை வீசும் பொலிஸார்! இதுவரை 25000 பேர் சிக்கினர்!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் பயனாக கடந்த நான்கு மாத காலத்திற்குள் 62 கோடியே 50 லட்சம் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
கடந்த ஜீலை மாதம் 5 ஆம் திகதி இந்த நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டதாகவும் தற்போது அது நடைமுறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட நடவடிக்கையில் நேற்று முன்தினம் வரை மதுபோதையில் வாகனம் செலுத்திய 25000 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒருவரிடம் குறைந்த பட்சம் 25000 ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால் தொடர்ந்தும் இதனை முன்னெடுத்துச்செல்ல தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments