Home » » இலங்கை சமூக வலைத்தளவாசிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை சமூக வலைத்தளவாசிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஸ்ரீலங்காவில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக சமூக வலைத்தளங்களை முறைகேடாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக CID என்ற குற்றப்புலனாய்வுப் பிரிவின் இணைய குற்ற புலனாய்வு விசாரணைப் பிரிவின் உதவி நாடப்பட்டிருக்கின்றது.
இந்தத் தகவலை பொலிஸ் திணைக்களத்தின் தேர்தல் செயலகத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சரத் பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்காவில் நவம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்ற நிலையில் இறுதி நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வேட்பாளர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுறு பூசும் பிரசாரங்கள் பெரும் எடுப்பில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்தே நவம்பர் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களிலும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
எனினும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கவும், எதிர்தரப்பு வேட்பாளரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் புரளிகயை பரப்பவும், சேறு பூசவும் முயற்சிகள் இடம்பெறுவதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து அவற்றை தடுப்பதற்காக CID என்ற குற்றப்புலனாய்வுப் பிரிவின் இணைய குற்ற புலனாய்வு விசாரணைப் பிரிவின் உதவியை நாடியிருப்பதாக பொலிஸ் தேர்தல் செயலகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் சரத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அனைத்து சமூக வலைத்தளங்களையும் பொலிசார் உன்னிப்பாக அவதானிப்பார்கள் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததுடன், இந்த கண்காணிப்புப் பணிகள் சனிக்கிழமை தேர்தல் முடிவுடைந்து ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் கூறினார்.
இதேவேளை சமூக வலைத்தளப் பாவணையை கண்காணிப்பதற்காக இணைய பாதுகாப்பு கண்காணிப்புப் பிரிவினதும், CERT என்ற கணனி அவரசகால பாதுகாப்புப் பிரினதும் உதவிகளையும் நாடியிருப்பதாகவும் பொலிஸ் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரசாரங்களையோ அல்லது எதிரணி வேட்பாளருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான சேறு பூசும் நடவடிக்கைகள் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள கணக்கு முடக்கப்படுவது மாத்திரமன்றி சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராகவும் கடுமையான சடட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும்பொலிஸ் தேர்தல் செயலகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |