ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ இன்று சட்டத்தரணிகளை சந்திக்கவுள்ளார்.
இதில் சுமார் இரண்டாயிரம் சட்டத்தரணிகள் வரை கலந்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. இதன் போது, அமைச்சர் சஜித் பிரேமதாசவின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட உள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், விசேட மக்கள் சந்திப்பு எதிர்வரும் 10ம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

0 Comments