Advertisement

Responsive Advertisement

சிகை அலங்கார நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார்! பல கோடி பெறுமதியில் சிக்கிய பொருட்கள்! மாளிகைக்காடு பகுதியில் சம்பவம் !!!!

வலம்புரி சங்கு உட்பட 5 கௌரி சங்குகளை தம்வசம் வைத்திருந்த இருவர் கைதாகியுள்ளனர்.
மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்தில் நேற்றைய தினம் மாலை குறித்த பொதி ஒன்றுடன் இருவரும் கைதாகினர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு சென்று கைது செய்துள்ளதுடன் இவ்வாறு கைதானவர்கள் அதே இடத்தை சேர்ந்த ஆதம்பாவா வயது-52, கந்தவனம் ஜீவரத்னம் வயது-43 ஆகியோரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை கண்டறியும் கருவி மற்றும் 625 கிராம் வலம்புரி சங்கு 1.235 கிராம் 1.505 கிராம் 675 கிராம் 515 கிராம் 1.190 கிராம் உள்ளிட்ட கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த சங்குகள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சுற்றிவளைப்பின் போது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கீர்த்தனன்(6873) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.



Post a Comment

0 Comments