Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கம்போடியா அரசின் நந்திவர்மன் விருதுபெற்ற மேழிக்குமரன் அருந்தவராஜாவுக்கு வவுனியா தமிழ் சங்கத்தால் கௌரவிப்பு விழா!!



கம்போடிய அரசின் கலை கலாசாரத் துறை,கம்போடிய அங்கோர் தமிழ்ச் சங்கம்,பன்னாட்டுத் தமிழர் நடுவம், நடாத்திய உலகத் தமிழ்க் கவிஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கம்போடிய அரசின் நந்திவர்மன் விருதுபெற்ற வவுனியா தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளரும், கவிஞருமான கலாபூசணம். தமிழ்மணி.மேழிக்குமரன் அவர்களுக்கு வவுனியா தமிழ் சங்கத்தால் 06.10.2019 அன்று கௌரவிப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யபட்டது.

இந் நிகழ்வில் தமிழருவி த.சிவகுமாரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா,வவுனியா மாவட்ட தமிழ் சங்க தலைவர் எஸ்.என்.ஜி.நாதன்,நகரசபை உபதவிசாளர் சு.குமாரசாமி,வவுனியா நகரச சபை உறுப்பினர் இராஜலிங்கம,சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன்,ஓய்வுபெற்ற வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சிதம்பரநாதன், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை தமிழ் ஆசிரிய ஆலோகர் உதயகுமார்,FME ஊடகல்லூரி நிறுவுனர் இ.இராஜேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் விருதுபெற்ற மேழிக்குமரனுக்கு தமிழ் சங்கத்தால் நினைவு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

0 Comments