தற்போது பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று மாலை தமது பணிபகிஷ்கரிப்பை நிறைவுக்குக்கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளன.
ரயில் சேவையானது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் தொடர்ந்து 12 ஆவது நாளாகவும் ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பினை நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் தேர்தல்காலங்களில் இவ்வாறான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களில் ஈடுபடாது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments