அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் வரையில் தற்காலிக தீர்வாக ஆசிரியர்களுக்கு இடைக்கால சம்பள கொடுப்பனவை வழங்க சம்பள ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மற்றும் சம்பள ஆணைக்குழு அதிகாரிகள் ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை அமைத்து அதன் பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.
0 Comments