Advertisement

Responsive Advertisement

முகநூல் போராளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் கூட்டமைப்பு எம்.பிக்கள்!!


தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்னுக்குபின் முரண்பட்ட கருத்துக்கள் பலவற்றை அச்சு,இலத்திரணியல் ஊடகங்கள் பிரசுரித்திருந்தன இவ் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதனால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பொங்கி எழுந்துள்ளனர். தங்களுடைய சிறப்புரிமை மீறப்பட்டதாகவும் தங்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டவர்களை தமது அடியாட்களை கொண்டு தாக்குவோம் என்றும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் முகநூலில் கருத்து வெளியிடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறப்பினர்கள் சிலரின் முக்கியமான பதிவுகளான "இந்திய வம்சவளி மக்களை வடக்கத்தையான் என்று பேசிவிட்டு பின்னர் அப்படி தான் பேசவில்லை என்று மறுப்பதும்,ஜநா மனித உரிமை பேரவையின் கால நீடிப்புக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டு ஆதரவு அளித்ததும்,OMP வேண்டாம் என்றும் பின்பு OMP வேண்டும் என்று கருத்து தெரிவத்ததும்,வரவுசெலவுதிட்டத்திற்கு ஆதரவு அளிக்கமாட்டேன் என்று கூறிவிட்டு பின்பு ஆதரவு அளித்தது" இப்படியாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஒலி வடிவிலும் ஒளி வடிவிலும் முகநூல்களில் பகிரப்பட்டு கருத்துக்கள் பதிவேற்றம்  செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது சிறப்புரிமையை பாவித்து முகநூல் போராளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் அண்மையில் கிளிநொச்சியில் தொடங்கப்பட்ட ஒரு வானொலிக்கும் இவ்வாறான அச்சுறுத்தல் குறித்த பாராளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய உரையிலே போர் முழக்கம் இடுவதும் (போராட்டம் வெடிக்கும்) பின்னர் அரசுக்கு முண்டுகொடுப்பதும் வேறு சிலர் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்றால் பாராளுமன்றத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகின்றோம் என்று வீரவசனம் பேசி அதை காற்றில் பறக்கவிடுவதும்  இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினர் தன்னுடைய மகளின் பிறந்த தினத்திற்கு ஜனாதிபதியை அழைத்து விருந்துபசாரம் வழங்கிவிட்டு பின்பு ஜனாதிபதி எங்களை ஏமாற்றி விட்டார் என்று கூறுவது என்பன கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடய முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களில் சிலவாகும் இப்படிப்பட்ட கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கொள்ளுவதால் பலரது முகத்திரைகள் கிழிக்கப்படுகின்றது. இதனால் இரத்தகொதிப்பு அடைந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள சமூக வலைத்தள செய்திகளை பதிவிடுபவர்களுக்கு கொலை அச்சறுத்தல் விடுத்துவருகின்றனர். 

ஊடக தர்மத்தை பற்றி வாய்கிழியப் பேசும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடக சுதந்திரத்தை இவர்களுக்கு வாக்களித்த இளைஞர்களிடம் இருந்து பறிக்க முற்படுகின்றனர்.

இது சூரியனை கைகளால் மறைப்பதற்கு ஒப்பான ஒரு செயலாகும். அனைத்து சமூக வலைத்தள நன்பர்களே இவர்களது சர்வாதிகாரப்போக்குக்கு எதிராக கிளர்ந்தௌவேண்டும் எனவும் இவர்களது உண்மை முகத்தை வெளிக்கொண்டுவரவேண்டும் என்றும் பாதிக்கபட்டவர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Post a Comment

0 Comments