தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதை இம்மாதம் 24 ஆம் திகதி மாலை அறிவிக்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கொழும்பில் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூடி கலந்துரையாட உள்ளதாகவும் இதன் போது எடுக்கும் தீர்மானத்தை அன்றைய தினம் அறிவிக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கின் 5 தமிழ் அரசியல் கட்சிகள் முன்வைத்த 13 யோசனைகளுடன் கூடிய கடிதத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர்களின் பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும் இந்த கலந்துரையாடல் நடைபெறும் என சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சில பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க முடியாமல் போனமை, முன்வைத்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளமை ஆகிய விடயங்களை கலந்துரையாடலும் தீர்மானத்தை எடுப்பதிலும் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments