மட்டக்களப்பில் இன்று காத்தான்குடி தற்கொலை குண்டு தாரியான முகமது அசாத்தின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்ட மட்டக்களப்பு கள்ளியன்காடு இந்து மயானத்திற்குள் ஊடகவியலாளர்களை பொலீசார் அனுமதிக்கவில்லை.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் இது போன்ற முக்கிய சம்பவங்களுக்கு ஊடகவியலாளர்களுக்கு எந்தவித காரணமும் இன்றி அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. உண்மையை வெளியிட வேண்டிய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மைகள வெளிவராது தடுப்பதாக அமையும் என்று ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
0 Comments