Advertisement

Responsive Advertisement

அதிநவீன ஆயுதங்களுடன் இலங்கைக்கு வந்துள்ள ஆபத்தான நபர்! புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் நாசகார நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆபத்தான நபர் ஒருவர் மீண்டும் நாட்டுக்குள் வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி சிறைச்சாலை பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்து தோல்வியடைந்த நிலையில், குறித்த ஆபத்தான நபர் மீண்டும் இலங்கை வந்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்ற உரகஹா மைக்கல் என்ற பாதாள உலக குழு உறுப்பினர் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட சுஜியினால் அவரது எதிர் குழு உறுப்பினரான கொஸ்கொட தாரக்கவை கொலை செய்வதற்காக இதற்கு முன்னர் மைக்கல் இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பி வைத்திருந்தார்.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் இந்த நபர் பாகிஸ்தான் போதைப்பொருள் கும்பலுடன் இணைந்து, அதிநவீன ஆயுதங்களை இலங்கைக்கு அனுப்பியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது மைக்கலும் இலங்கை வந்துள்ள நிலையில் அவரால் கொண்டு வரப்பட்ட துப்பாக்கிகள் முக்கிய புள்ளிகளை கொலை செய்வதற்காக கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments