Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஸ்தலத்திலேயே சாவு!

புகையிரதத்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (01) இரவு 11.45 மணியவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பிலிமத்தலாவ, ரணவக பகுதியை சேர்ந்த 23 வயதுடைய புத்திக பிரதீப் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பேராதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராதெனிய - பிலிமத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் பொல்கஹவெலயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேராதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments