Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கௌரவம் : ஊடக அமைப்புக்களின் பிரதானிகளும் பங்கெடுப்பு !!


நூருல் ஹுதா உமர் 

ஆர்.கே.எஸ். நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் 7ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சனிக்கிழமை (31) அட்டாளைச்சேனை தனியார் மண்டபம் ஒன்றில் ஊடகவியாலளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று அந்நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.றுக்ஸான் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் அச்சு, இலத்திரனியல், (தொலைக்காட்சி, இணையம்) ஊடகங்களில் சுறுசுறுப்பாக செய்தி வழங்கும் பிராந்திய ஊடகவியலாளர்கள் பலரும், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள் பலரும் இந்நிகழ்வில் பாராட்டப்பட்டனர். 


இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், கல்முனை நகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கணேஷ், என்.எப்.ஜி.ஜீயின் தவிசாளர் சிராஸ் மசூர், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், தேற்காசிய சமூக அபிவிருத்தி இஸ்தாபன தலைவர் யூ.எல்.ஹுதா,  நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564

Post a Comment

0 Comments