Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வைத்தியசாலையின் மாடியிலிருந்து குதித்து இளைஞனொருவர் தற்கொலை


மட்டக்களப்பு வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் 2 ஆம் மாடியிலிருந்து குதித்து இளைஞனொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தரென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு பழுகாமம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மயூரன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments