Home » » சூடுபிடிக்கும் ஜலால் விவகாரம் : கல்முனை வலயக்கல்வி பணிமனை முன்றலில் போராட்டம் !!

சூடுபிடிக்கும் ஜலால் விவகாரம் : கல்முனை வலயக்கல்வி பணிமனை முன்றலில் போராட்டம் !!



நூருள் ஹுதா உமர். 

கல்முனை கல்வி வலயம், சாய்ந்தமருது கல்வி கோட்டத்தில் உள்ள கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காக கொண்டு கல்வியமைச்சின் "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி தொண்ணுறு இலட்சம் ரூபா பணத்தை இடைநிறுத்தி வேறுபாடசலைக்கு கொண்டு செல்ல அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறி கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்தின் ஒரு அங்கமாக இன்று (12) கல்முனை வலயகல்வி அலுவலகத்தின் முன்னால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. 

மாகாண கல்விப்பணிப்பாளர் இன்று தனது நண்பர் ஒருவரின் பிரியாவிடை நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள கல்முனைக்கு வந்திருந்தார். அப்போதைய சந்தர்ப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களினால் எதிர்வரும் திங்கட்கிழமை இப்பாடசாலை விடயம் தொடர்பாக ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்ட கடிதத்தை  அதிபர் மற்றும் பாடசாலைக்கு வழங்க வேண்டி வலயக்கல்வி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. 

அந்த கடிதத்தை பெற்றுச்செல்ல அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருக்கு கல்முனை வலய கல்வியதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனையறிந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மாகாண கல்வி பணிப்பாளரை சந்திக்க மேற்கொண்ட முயற்சி கைகூடாத நிலையில் காரியாலய முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |