காணாமல்போனோரை நினைவுகூரத்தக்க இடங்கள் அரசாங்கத்தின் அனுசரணையில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனோர் மற்றும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.
42ஆவது மனித உரிமைகள் பேரவையின் மாநாடு ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. இந்த பேரவையில் குறித்த செயற்குழு முன்வைத்துள்ள அறிக்கையிலேயே இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த குழு இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வுகளை நடத்தி இருந்தது.
குறித்த ஆய்வுகளின்படி இலங்கையில் காணாமலாக்கப்பட்டோரை நினைவுகூருவதற்கான போதிய ஏற்பாடுகள் இல்லை என அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் காணாமல் போனோரை நினைவுகூரத்தக்க இடங்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments