Advertisement

Responsive Advertisement

ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் ஊடுருவியுள்ள வாகனம்! காத்திருக்கும் 200 பயங்கரவாதிகள்!


ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் லொறியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் அதிகரித்துள்ளதாக இந்தியா கூறிவருகிறது.

இந்நிலையிலேயே கத்துவா பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே வெடிபொருட்களுடன் குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காஷ்மீருக்குள் ஊடுறுவும் வகையில் சுமார் 200 பயங்கரவாதிகள் காத்திருப்பதாகவும், இதன்காரணமாக எல்லைப் பகுதியில் இராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளமையானது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் ஆயுத பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் சமீப காலமாக அதிகளவில் ஊடுருவி வருவதாகவும், தற்கொலை தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments