Home » » புலமைப்பரிசில் கொடுப்பனவை Online மூலம் வழங்க நடவடிக்கை

புலமைப்பரிசில் கொடுப்பனவை Online மூலம் வழங்க நடவடிக்கை


புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் கொடுப்பனவுக்கான நடவடிக்கைகளை செயல்திறன் மிக்கதாகவும், மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிடைக்கக்கூடிய வகையிலும் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதே போன்று தரம் 13 வரையிலான கட்டாய கல்வியின் கீழ் தொழில்நுட்ப கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் இதன் கீழ் ஒழுங்குகள் மெற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கான திட்டத்தின் கீழ் முதற்கட்மாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் தகவல்கள், பரீட்டையில் பொற்றுக்கொண்ட புள்ளிகள் என்பவற்றை உள்ளடக்கி புலமைப்பரிசில் கொடுப்பனவிற்க்கான தகுதியை பெற்ற மாணவர்களின் சகல தகவல்களும் Online முறைக்கு அமைவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றும் மாணவர்கள் இது வரைகாலமும் தமக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் அதற்கான உறுதிச்சீட்டுகளை (Voucher) சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் காரணமாக நிலவிய பிரச்சினை மற்றும் தாமதங்கள் இந்த Online முறை மூலம் தீர்க்கப்படுகின்றது. புலமைப்பரிசில்கான கொடுப்பனவு மாணவர்களின் வங்கி கணக்கிற்கு வைப்பு செய்யப்பகின்றது.
தற்பொழுது மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவான 500 ரூபா 750 ரூபாவாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு அலோசனை வழங்கியுள்ளார்.
புலமைப்பரிசில் கொடுப்பனவிற்காக அரசாங்கம் வருடாந்தம் 362 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இரண்டாவது கட்டமாக 2020 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் அனைத்து அரசாங்க பாடசாலைகள், பிரிவெனாக்கள், தனியார் மற்றும் அரச நிதி உதவியுடன் செயற்படும் பாடசாலை மாணவர்களுக்காக Online முறையின் மூலம் புலமைப்பரிசில் கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வருடந்தோறும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு சுமார் 350,000 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இவர்களுள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு வருடாந்தம் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |