Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காட்டிற்கு விறகு வெட்டச் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்!

திருகோணமலை கந்தளாய் பகுதியில் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற ஒருவரை யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த விஜயலால் ஹேரத் வயது 43 என்பவரே யானை தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை விறகு எடுப்பதற்காக காட்டுக்கு இருவர் துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை காட்டுக்குள் மறைந்திருந்த காட்டு யானை முன்னால் சென்றவரை தாக்கியதாகவும், மற்ற நபர் தப்பியோடி வேறு நபர்களை அழைத்துக் கொண்டு யானையை விரட்டியதாகவும் யானையின் தாக்குதலுக்குள்ளான நபரை வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments