தனது ஆண் பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சு வழங்கி அவர்களையும் கொலை செய்துவிட்டு தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த ஆண் பிள்ளைகள் 13 மற்றும் 7 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம், உடப்புவ, பள்ளிவாசல்பாடுவ பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தி் 31 வயதான தந்தையே இவ்வாறு விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.
உயிரிழந்த ஆண் பிள்ளைகளின் சடலங்கள் புத்தளம் பொது வைத்தியசாலையிலும் தந்தையின் சடலம் வீட்டு அறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments