வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையினால் வீதிகள் நீர் நிரம்பி வெள்ள காடாக காட்சியளித்தன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா, மன்னார் வீதி, காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பான பகுதி மற்றும் தாண்டிகுளம், குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன், தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
|
இதன் காரணமாக குறித்த வீதிகளினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், வவுனியா நகரின் சில வர்த்தக நிலையங்களிற்குள்ளும் வெள்ள நீர் உட்சென்றமையால் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
|
0 Comments