Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் முதியோர்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு



மட்டக்களப்பு குருக்கள் மடம் கிராமத்தில் அமைந்துள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் முதியோர்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு ஓய்வு நிலை அதிபர் முதியோர் இல்லத்தின் பணிப்பாளர் கா.சந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நலிவடைந்த மக்களை மீளக்கட்டியெழுப்பி பலப்படுத்துவதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அவ்அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.கதிர்காமநாதன், பணிப்பாளர் பி.லுவிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர்களை உடல் உளரீதியாகவும் வலுவூட்டும் வகையில் குறும்படங்கள் மற்றும் செயற்பாட்டு செயலமர்வுகள் மூலம்  அவர்களது இயலுமையை கட்டியெழுப்பும் வகையில் பயிற்சிகள் நடைபெற்றது. 

உலகளவில் 2050 ஆம் ஆண்டளவில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களாக 2 பில்லியன் முதியோர்கள் இருப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டும் எதிர்கால சவால்களுக்கு முதியோர்களை தயார்படுத்தும் நோக்கிலுமே இச் செயலமர்வுகளை நடாத்திவருவதாக நலிவடைந்த மக்களை மீளக்கட்டியெழுப்பி பலப்படுத்தும் அமைப்பின் முகாமைத்தவப் பணிப்பாளர் ஆர்.கதிர்காமநாதன் தெரிவித்தார்.






குருக்கள் மடத்தில் முதியோர்களுக்கான வலுவூட்டல் கருத்தரங்கு

Rating: 4.5
Diposkan Oleh:
Team New

Post a Comment

0 Comments