Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு - கறுவப்பங்கேணியில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு - கறுவப்பங்கேணி, நாவலடி குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கே.காந்தராஜா தலைமையில் இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மழை காலங்களில் இவ்வீதியை மக்கள் பயன்படுத்த முடியாதிருந்த நிலையில், வீதியை புனரமைத்து தருமாறு பிரதேசமக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
அந்தவகையில், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கே.காந்தராஜா கிராம அபிவிருத்தி திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனடிப்படையில், இவ்வீதியை புனரமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








Post a Comment

0 Comments