Advertisement

Responsive Advertisement

கொழும்பில் சற்று முன்னர் இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை


கொழும்பில் சற்று முன்னர் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பே கல்லறை பகுதியில் கூர்மையான ஆயுதங்களில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள குழுக்கள் இரண்டிற்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 4.35 மணியளவில் முச்சக்கர வண்டிகள் இரண்டில் வந்த மர்மநபர்கள், குறித்த இருவரையும் கொலை செய்துள்ளனர்.
ஒரு முச்சக்கரவண்டியில் வந்த 4 பேரினால் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்கி இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினராக ஆனமாலு ரங்க உட்பட இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments