Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம்!!

சர்வதேச போர்குற்ற விசாரணையை நடாத்து,தமிழ் அரசியல் கைதிகள் அனனைவரையும் விடுதலை செய்,வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து,இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து  போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16.09.2019 அன்று நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அணிதிரட்டும் முகமாக இன்று காலை யாழ் நல்லூர் ஆலய முன்றல் மற்றும் யாழ் பேருந்து தரிப்பிடநிலையங்களில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது 

இந் நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமசந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். தமிழ் மக்கள் பேரவையினர் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments