Home » » சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் 56 ஓட்டங்களினால் வெற்றி

சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் 56 ஓட்டங்களினால் வெற்றி


( அஸ்ஹர் இப்றாஹிம் , யு.கே.காலித்தீன் , றியாத் ஏ மஜீட்)
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40 வருட புர்த்தியை முன்னிட்டு கிழக்கு மாகாண ரீதியில்ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 9 பிரதேசங்களைச் சேர்ந்த 32 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கும் 20 இற்கு 20 மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி தொடரின் முதலாவது போட்டி  சாய்ந்தமருது பொலிவேரியன்ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை ( 2 ) மாலை ஆரம்பமாகியது.
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் சிரேஸ்ட ஆசிரியருமான  எம்..எம்.அஸ்ஹர்தலைமையில் இடம்பெற்ற மேற்படி அங்குரார்ப்பண கிறிக்கட் போட்டியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ்விளையாட்டுக் கழகமும் கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக் கொண்டன.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழநது 168 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக்கழகம் 18 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து112 ஓட்டங்களைப்பெற்று  56 ஓட்டங்களினால் தோல்வியினை தழுவிக் கொண்டது.
லீக் அடிப்படையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றதுடன் கழக வீரர் எஸ்.எம்.றம்ஸீன் 51 பந்து வீச்சுகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப்பெற்று ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் மோட்டார் வாகன திணைக்கள பிரதம பரிசோதகரும் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகதவிசாளருமான பொறியியலாளர் .எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாகவும் கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் கௌரவ அதிதியாகவும் சுற்றுப் போட்டி தொடரின் இணை அனுசரணையாளர்கள் விசேட அதிதிகளாகவும் , பங்கேற்கும் விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். இத்தொடரின் 2 வது மற்றும் மூன்றாவது போட்டிகள் நாளை சனிக்கிழமை காலையும்விடயமாகும். மாலையும் இடம்பெறவுள்ளன.
3.08.2019 காலை சம்மாந்துறை ஈஸ்டன் ரோயல் அணியும்  சம்மாந்துறை றியல் மெற்றிக் அணியும்    அன்று மாலை கல்முனை றினோன் அணியும் சாய்ந்தமருது பீமா அணியும்  மோதவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |