Home » » இலங்கையில் பரவும் ஆபத்தான நோய்! இளம் ஆண்கள், பெண்களுக்கு உயிராபத்து ஏற்படும் அபாயம்

இலங்கையில் பரவும் ஆபத்தான நோய்! இளம் ஆண்கள், பெண்களுக்கு உயிராபத்து ஏற்படும் அபாயம்

இலங்கையில் ஆட்கொல்லி நோயான எயிட்ஸிற்கு இணையான மற்றுமொரு நோய் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
HIV எயிட்ஸ் நோய்க்கு சமமான Hepatitis B என்ற நோய் வேகமாக பரவி வருவதாக செரிமான மற்றும் கல்லீரல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.
20 - 40 வயதுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக தாக்குதவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாகவும், பாலியல் தொழிலாளர்கள் மற்றும் ஆண்கள் சிலரினால் இந்த நோய் தொற்று சமூகத்தில் பரப்பப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெப்படைட்டிஸ் பீ நோய் தாயிடம் இருந்து பிள்ளைக்கும், போதைப்பொருளை ஊசி மூலம் பயன்படுத்துவதினாலும், தொற்றுக்குள்ளானவரின் இரத்தத்தை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின் காரணமாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஹெப்படைட்டிஸ் பீ என்ற ஊசியை பெற்றுக்கொள்வது அவசியமாகும். இதனை அரச வைத்தியசாலைகளில் இலகுவாக பெற்று கொள்ள முடியும்.
இதன் ஊடாக இந்த நோயில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும், அந்த ஊசியை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விசேட வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |