Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கன்னியா வெந்நீரூற்று விவகாரத்தின் இரு மாத இழுபறி! சுமந்திரனால் இரண்டு நாட்களில் எப்படி சாத்தியம்?

சர்ச்சைக்குரிய கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதற்கான பொறுப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சில சட்டத்தரணிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த விடயத்திற்கான பொறுப்பை கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய காணியின் உரிமையாளர் கணேஸ் கோகில றமணி ஒப்படைத்திருந்தார்.
எனினும் இந்த வழக்கில் இரு மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.
இதனை தொடர்ந்து, வழக்கில் சுமந்திரனை உள்வாங்கினால் போதும் விரைவில் வழக்கில் திருப்பம் ஏற்படும் என பிரபல சட்டத்தரணியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த வழக்குடன் தொடர்புடைய குழுவிலிருந்த ஏனைய சட்டத்தரணிகள் சிலர் அரசியல்வாதிகள் வேண்டாம். அது இந்த வழக்கிற்கு நல்லதல்ல என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த வழக்கினை கையாள்வதற்கான உரித்தை, கடித வடிவில் தனது ஒப்பத்துடன் ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரனிடம் கொடுத்துள்ளார் கோகில றமணி.
இதன் பிரகாரம் இவ்வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் மனுதாரர் தரப்பில், சட்டத்தரணி செல்வி உதயகுமார் பிராஷாந்தினியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
மேற்கொள்ளப்பட்ட வாத, பிரதி வாதங்களின் பின்னர் வெந்நீரூற்று பகுதிக்கு அருகாமையில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இரண்டு மாதங்கள் நீடித்த சர்ச்சைக்கு இரு நாட்களில் முதற்கட்ட வெற்றியை பாதிக்கப்பட்ட பெண்மணி கோகில றமணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான அணியினர்.
இது தொடர்பில் கோகில றமணி கூறுகையில், தற்போது தான் தனக்கு நீதி கிடைக்கும் என்ற முழுமையான நம்பிக்கை வந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.

Post a Comment

0 Comments