Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புகைப்பரிசோதனையில் இனிமேல் இடம்பெறவுள்ள மாற்றம்!

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் காபன் வரிக்குப் பதிலாக வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணத்துடனான புதிய வேலைத்திட்டமொன்றை வகுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் புதன்கிழமை வாகன புகை வெளியேறுவதற்கான சான்றிதழ்களை விநியோகிக்கும் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவுக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.
திறைசேரி தற்போது இந்த வேலைத்திட்டத்தை வகுத்திருப்பதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காபன் வரி தொடர்பில் வாகன உரிமையாளர்களிடம் இருந்து பல்வேறு முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு கவனம் செலுத்தியது. இதற்கமைவாக திறைசேரி மற்றும் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு நிவாரணத்துடன் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுடைப்படுத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
வாகன புகை தொடர்பான சான்றிதழை வழங்கும் போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments