Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் தமிழ் மக்கள் கட்சி உதயம்!

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண கூட்டம், இன்று காலை மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டதரணியுமான கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றிணைந்த தமிழ் மக்கள் கட்சி என்ற பெயர் சூட்டப்பட்டு, கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கட்சியை வழிநடத்தும் வகையில் மாவட்டங்களுக்கான தற்காலிக அமைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. இந்த கூட்டத்தில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments