Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கண்டியில் ஜுலை 7 இல் பிக்குகள் மாநாடு; நிறைவேற்றப்படவுள்ள முக்கிய தீர்மானம்!

பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி கண்டியில் நடத்தப்படவுள்ள மாநாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி – தலதாமாளிகையில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம் பிக்குகளுடன் பிக்குகள் மாநாடு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவும், அனைத்து இன மக்களையும் ஒரு சட்டத்துக்கு கீழ் கொண்டு வருவதுமே இந்த மாநாட்டின் நோக்கமாக பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
இதன்போது முஸ்லிம் மக்களின் ஆடை விவகாரம் , ஹலால் , மத்ரஷா , காதிக்கோர்ட் சட்டம் மற்றும் தௌஹீத் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளதாக பொதுபலசேனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments