Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

3,800 பட்டதாரிகளுக்கு இன்று நியமன கடிதங்கள் வழங்கப்படும்


16,800 பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழிலுக்கான நியமனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,800 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று (30) வழங்கப்படவுள்ளன. 

ஏனைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் அடிப்படையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும், களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 200 பட்டதாரிகளுக்கும் இன்று அரசாங்க தொழிலுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 

இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட ஏனைய பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நியமனம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
3,800 பட்டதாரிகளுக்கு இன்று நியமன கடிதங்கள் வழங்கப்படும்

Rating: 4.5
Diposkan Oleh:
Team New

Post a Comment

0 Comments