Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஞானசார தேரரின் முயற்சியும் கல்முனை உண்ணாவிரதத்தில் தோல்வியுற்றது! சூடுபிடிக்கும் போராட்ட களம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளது.
மதத் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் கடந்த ஆறு நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது குறித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றையதினம் போராட்டக்களத்திற்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான விடயத்திற்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிமொழி வழங்கியதையடுத்தே கல்முனையில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த போராட்டம் சுழற்சி முறையிலான போராட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபை உறுப்பினர் ராஜன் அவர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருக்கிறார் மற்றவர்கள் சுழற்சி முறையில் நீராகாரம் மாத்திரம் அருந்துவதாக குறிப்பிட்டிருக்கின்றனர்

Post a Comment

0 Comments