Home » » நூற்றுக்கணக்கான பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் கல்முனையில்! தீர்வு தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை

நூற்றுக்கணக்கான பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் கல்முனையில்! தீர்வு தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை


கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து அவர்களின் கோரிக்கைக்கு தீர்வுகாணும் முகமாக பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கை குறித்து கல்முனை வடக்கு பிரதேச செயலக விடே குழுவுடன் பிரதேச செயலக மண்டபத்தில் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அம்பாறை விகாரையின் விகாராதிபதி மற்றும் பல தேரர்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இறுதி தீர்வு இன்று அறிவிக்கப்படுமென ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள பேதிலும் ஊடகங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கப்படவில்லை.
கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த 5 நாட்களாக பௌத்த துறவியுட்பட 5 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, ஞானசார தேரர், கல்முனை தமிழர் தரப்பு உண்ணாவிரதத்தை முதற்கட்டமாக கருதி முடித்து வைக்கிறேன் என எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார் என அமைச்சர் மனோ கணேசன் இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றையதினம் கல்முனை விவகாரம் தொடர்பில் தீர்வு வழங்குவதற்காக சென்ற மனோ கணேசன், சுமந்திரன் மற்றும் தயாகமகே ஆகியார் இறுதியில் மக்கள் விளைவித்த குழப்பத்தையடுத்து இடை நடுவில் அங்கிருந்து திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |