Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பதற்றமாகிவரும் கல்முனை; போராட்டக்காரர்களின் உயிருக்கு ஆபத்து; உறுதிப்படுத்திய மருத்துவர்கள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் இன்றும் 5ஆவது நாளாக தொடர்கின்றது.
இந்நிலையில், தற்போது போராட்டக்காரர்களின் உடல்நிலை அபாயக் கட்டத்திலுள்ளதாக இ.முரளீஸ்வரன் தலைமையிலான வைத்திய குழாம் தெரிவித்தாக எமது செய்தியாளர்  தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் கல்முனையில் போராட்டம் வெடிக்கும் என மக்கள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர்.
மருத்துவ குழாம் போராட்டக்காரர்களின் உடல்நிலையை பரிசோதித்த பின்பு மிகவும் அபாயநிலையில் உடல்நிலைகள் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கல்முனையில் வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என தெரிவித்து முஸ்லிம் மக்கள் இன்றும் தமது போராட்டத்தை தொடர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.









Post a Comment

0 Comments