Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மோடிக்கு குடை பிடித்த மைத்திரி: வறுத்தெடுக்கும் இணையதாரிகள்!

சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடை பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தபோது கொழும்பில் மழை பெய்துகொண்டிருந்தது.
இதனால் ஜனாதிபதி செயலகத்தில் மோடியை வரவேற்கும் வைபவம் கொட்டும் மழையிலும் இடம்பெற்றது.
இதன்போதே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோடியை குடை பிடித்து அழைத்துச் சென்றார்.
ஒரு இறைமையுள்ள நாட்டின் அதியுச்ச தலைமைப் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி இன்னோர் நாட்டின் பிரதமருக்கு குடை பிடிப்பதா என சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் சிலர், "மைத்திரி மீண்டும் தன் எளிமைப் பண்பை நிலைநாட்டிவிட்டார்" என சமூக வலைத்தளங்களில் எழுதியுள்ளனர்.
எவ்வாறாயும் மைத்திரி ஒரு நட்புறவின் அடிப்படையில் இவ்வாறு செயற்பட்டதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments