Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம்

கல்முனை - சாய்ந்தமருது தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மரபணு பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
ஏற்கனவே சடலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பழுதடைந்ததால், சடலங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு புதிய மாதிரிகள் பெறப்பட்டன.
பெறப்பட்ட புதிய மாதிரிகள் நேற்று முன்தினம் சட்ட வைத்திய அதிகாரி ஊடாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் இரசாயான பகுப்பாய்வு திணைக்களத்தின் மரபணு பரிசோதனை அறிக்கைகள் நீதிமன்றம் மற்றும் குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட உள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய, சஹ்ரானின் குடும்ப உறுப்பினர்களின் மரபணுகளை இந்த பரிசோதனை அறிக்கை மூலம் அறிந்து கொள்ள முடியும் என இரசாயன பாகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, காத்தான்குடியை சேர்ந்த மொஹமட் சஹ்ரான் ஹசிமின் தந்தை, சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் பிள்ளைகள் சாய்ந்தமருது பகுதியிலுள்ள உள்ள வீடொன்றில் தங்கியிருந்தனர்.
பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்ததை அடுத்து அவர்கள் குண்டுகளை வெடிக்க செய்தனர். எனினும் இந்த சம்பவத்தில் சஹ்ரானின் மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோருடன் உயிருடன் தப்பியிருந்தனர்.

Post a Comment

0 Comments