Home » » கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டு.சீயோன் தேவாலயம் சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மட்டு.சீயோன் தேவாலயம் சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!


கடந்த உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் குண்டுத் தாக்குதலால் சேதமுற்ற மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு கொழும்பு மறை மாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று சனிக்கிழமை (15) கடும் பாதுதகாப்புடன் விஜயம் மேற்கொண்டார்.

மட்டு சியோன் தேவாலயத்தில் தற்போது இராணுவத்தின் பொறியியல் பிரிவால் முன்னெடுக்கப்படும் புனரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டதுடன் இவ்வாலயத்தின் புனரமைப்புப் பணிக்காக சியோன் தேவாலயப் பிரதம போதகர் றொஷான் மகேஷனிடம் ஒரு தொகைப்பணத்துக்கான காசோலையையும் வழங்கி வைத்ததுடன் குண்டு வெடிப்பினால் காயமுற்றவர்களையும் சந்தித்து அவர்களது சுக நலன்களையும் விசாரித்து கேட்டறிந்து கொண்டார்.

தற்போது முன்னெடுக்கப்படும் புனரமைப்புப் பற்றி இராணுவத்தின் பொறியியற் பிரிவிடமும் கேட்டறிந்து கொண்டதுடன் காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய இறையாசீர்வாதம் கிடைக்கத் தாம் பிராத்திப்பதாகவும் இவ்வாலயப் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் இராணுவத்தினருக்கு தாம் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் நாட்டில் இவ்வாறான அனர்த்தங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்பதாகவும் நாட்டில் நிரந்தர சாந்தி சமாதானம் நிலைக்கவேண்டியும் தான் ஆண்டவனைப் பிரார்த்திப்பதாகவும்; அவர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.


கொழும்பு மறை மாவட்ட ஆயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் சியோன் தேவாலய விஜயத்தின்போது மட்டு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை, கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர மற்றும் அருட் தந்தையர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்,பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பெருமளவு இராணுவத்தினர் பாதுகாப்புக்காக சீயோன் வோலயத்தை சூழவுள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டதுடன் மோப்ப நாய்களும் கொண்டுவரப்பட்டிருந்தன.










Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |