Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பயங்கரவாதி சஹ்ரானின் நண்பர்களை சிறையில் தேடும் முஸ்லிம் அரசியல்வாதிகள்


உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி சஹ்ரானுக்கு நெருக்கமானவர்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தேடி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஜேர்மன் மைப்பு ஒன்றும் இரகசிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவு தகவல் அடிப்படையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புடையவர்கள் என்ற பேரில் இதுவரையில் 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யார் என்பதனை இன்னமும் விசாரணை பிரிவு அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments