Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

காத்தான்குடியில் 20 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸாரில் 20 பேர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள இணையம் ஒன்றை மேற்கோள் காட்டி தமிழ் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
புலனாய்வுத்துறையினரின் அறிக்கையின் அடிப்படையிலேயே இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments