Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கைது செய்யப்பட்ட பொறியியலாளரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொறியியலாளரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்குமாறு உத்தரவிடயப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கெப்பித்திகொல்லாவ நீதவான் முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே ஹொரவ்பொத்தான பொலிஸாருக்கு நீதிமன்றம் மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை பகுதியை சேர்ந்த சஹீட் முகம்மது நசுர்தீன் (53 வயது) என்பவரே நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய தகவலை அடுத்தே இந்த பொறியியலாளர் கைது செய்யப்பட்டதாகவும், இவர் ஹொரவ்பொத்தான மற்றும் கெப்பித்திகொல்லாவ பகுதிகளில் பள்ளிவாசல் கட்டுவதற்கு நிதி வழங்கியவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த பத்து வருடங்களாக சவுதி அரேபியாவில் பொறியியலாளராக கடமையாற்றி வந்த இவர் தௌஹீத் ஜமாத்துடன் சம்பந்தப்பட்டவர் எனவும், ஹொரவ்பொத்தான பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் எனவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments