Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் 2 வது நாளாக வியாழேந்திரன் எம் .பி சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டம்.


-

-கனகராசா சரவணன்  --



அதுரலிய ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) 2 ஆவது நாளாக சுழற்சி முறையில் மட்டு காந்தி பூங்காவிற்கு முன்னாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்



அமைச்சர் ரிசாhட் பதியுதீன் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். என கோரிக்கை விடுத்து நேற்று சனிக்கிழமை (01) அடையாள உண்ணாவிரத போராட்டம் தமிழ் முற்போக்கு அமைப்பின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டது



இதனை தொடர்ந்து இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து சுழற்சி முறையில் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுத்துச் செல்வதாக தீர்மானிக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



இந்த போராட்டத்திற்கு வலுசோர்க்கும் முகமாக நேற்று சனிக்கிழமை மட்டு மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய ஸ்ரீ சுமணரட்டன தேர்ர் தலைமையில் தேரர்கள் கலந்து கொண்டனர்



இதனைத் தொடர்ந்து பல்வேறு சிவில் அமைப்புக்கள் ஒன்றினைந்ததுடன் பொலநறுவை திம்புலாக்கலை விகாரை தேரர் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இதில் பங்கு கொண்டு நாளை திங்கட்கிழமை 25 மேற்பட்ட தேரர்களம் கலந்து கொள்ள உள்ளதாக எதற்கும் பயப்பட தேவை இல்லை நாங்கள் பக்கபலமாக இருப்போhம் என  பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனிடம் தெரிவித்தாh.



இதேவேளை இன்று மாலை முதல் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கே. மோகன்  இந்த உண்ணாவிரத போராட்த்தை வலுசோர்க்கும் முகமாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை  ஆரம்பிக்க போவதாக  அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments