Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு -புன்னைச்சோலை ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு - 2019

மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு இன்று ஞாயிற்று கிழமை மாலை 7.00 மணிக்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 6 நாட்கள் திருச்சடங்கு நடப்பதுடன் ,தினசரி பூசை பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும்.
 2019.06.05 அன்று புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டும் வைபவம் வீதி வலமாக இடம் பெற இருக்கிறது.
2019.06.07 புதன் கிழமை பிற்பகல் 4..00 மணிக்கு தீ மிதிப்பு வைபவம் இடம் பெறும்,அதனைத்தொடர்ந்து பக்த அடியார்கள் அனைவருக்கும் அன்னதானக்குழுவினரால் அன்னதானம் வழங்கப்படும். அதன் பின்பு பலிக்கருமப் பூசையுடன் திருச்சடங்கு இனிதே நிறைவு பெறும்.
இந்து அடியார்கள் அனைவரையும் திருச்சடங்கில் சமூகமளித்து அம்பாளின் அருள் பெற்றேகுமாறு பணிவன்புடன் அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.

Post a Comment

0 Comments