Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தலவாக்கலையில் திடீர் தீ விபத்து – 10 வீடுகள் தீக்கிரை



தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தின் ஸ்டேலின் பிரிவில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இதில் சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுடன் வீடுகளில் குடியிருந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்காலிகமாக ஸ்டேலின் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை சிரமத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
எனினும், சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள தலவாக்கலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments