நாட்டின் பல பகுதிகளிலும் நாளைய தினமும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இந்த தாக்கம் அதிகரித்து காணப்படும்.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, நீர்வெளியேறுதல், அதிக களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
0 comments: