Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சஹ்ரானின் மடிக்கணனியின் துணையுடன் 40 பேர் மடக்கிப் பிடிப்பு!

உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் நுவரெலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைதாரி சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்து பிரதான தற்கொலை சூத்திரதாரி சஹ்ரானின் மடிக்கணனி கைப்பறப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மடிக்கணனியிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் காத்தான்குடியைச்சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த இரண்டு வர்த்தகர்கள் பிபிலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.ஆனால் இவர்களின் சொந்த இடமும் காத்தான்குடிதான்.
இந்த மடிக்கணனியில் 60 பேரின் பெயர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments