இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக அமையத்தில் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திபொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு முக்கிய சந்தேகநபரான புஹாரி மொஹம்மட் ராபிக் என்பவர் சிக்கியுள்ளார்.
தெஹிவளை, கல்விகாரை வீதியை சேர்ந்த சந்தேகநபர் கொம்பனி வீதியை சேர்ந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் கொழும்பு 10, மருதானை, டி.பி.ஜாயா வீதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்திருந்தார்.
இந்த நிலையில் அவரின் தனிப்பட்ட அலுவலகத்தை சோதனையிட்ட பொலிஸார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 83 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தையும், 97 பவுண் தங்க ஆபரணங்களையும் மீட்டிருந்தனர்.
அத்துடன், தெஹிவளை பிரதேசத்திலுள்ள சந்தேகநபரின் சொகுசு வீடும், அவரது வங்கி கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments