Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பான பல ரகசியங்களை அம்பலப்படுத்தும் மனைவி

பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதன்போது சஹ்ரானின் மனைவியான சாதியாவிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.
சஹ்ரான் தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் தன்னுடன் கொழும்பில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தோம். கடந்த 18ம் திகதி அதிக நேரத்தை எங்களுடன் செலவிட்டார். வழமைக்கு மாறாக மகளுடன் அதிக நேரம் விளையாடினார்.
இதன்போது தான் ஜிஹாத் ஆகப் போவதாக தெரிவித்தார். என்னை பிறிதொரு இடத்தில் கொஞ்ச நாளைக்கு இருக்கச் சொன்னார்.
எனினும் அவரின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நாரம்மலையில் உள்ள எனது வீட்டில் விடுமாறு கேட்டேன். அதற்கு அவர் உடன்படவில்லை.
பல தடவை அவரிடம் விவாகரத்து செய்ய கூறியிருந்தேன். அவை கைகூடவில்லை. விவாகரத்து செய்ய மறுத்து விட்டார்.
தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட அன்று நாங்கள் சாய்ந்தமருதில் இருந்தோம். எங்கள் கும்பல் தற்கொலை செய்து கொண்டு விட்டதால் நாங்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிவோமென ரிஸ்வானின் மனைவி என்னிடம் கூறினார்.
சஹ்ரான் இப்படி செய்தமை குறித்து கவலையடைந்த அவரின் தாயார் எதற்கும் கவலைப்பட வேண்டாமென எங்களை தேற்றினார்.
புர்க்காவை அணிவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் எங்கு சென்றாலும் புர்க்கா அணிந்து செல்லுமாறு சஹ்ரான் அச்சுறுத்துவார். நான் எங்கிருந்தாலும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார்.புர்க்காவை அணிந்து செல்வது பாதுகாப்புக்கு உகந்தது என அடிக்கடி கூறுவார்.
என்னுடன் இருந்த சாரா மற்றும் பெரோசாவின் கணவன்மார்கள் தற்கொலை தாக்குதலில் இறந்தனர்.அப்படி அவர்கள் இறந்தது பெருமையாக இருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர் என விசாரணை அதிகாரிகளிடம், சாதியா தெரிவித்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி சஹ்ரானின் சகோதரர்கள் உட்பட 17 பேர் குண்டுவெடித்து உயிரிழந்த நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மனைவி மற்றும் மகள் பாதுகாப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்
சஹ்ரானின் மனைவியின் தகவல்களுக்கு அமைய நீர்கொழும்பு மற்றும் கொள்ளுப்பிட்டிய லிபர்ட்டி பிளாசா ஆகிய பகுதிகளில் இரண்டு வீடுகள் அரச புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments