
தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள அசாதாரண சூழ்நிலையில் பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய பங்குவகிக்கும் மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்களுக்கு நடாத்தப்படும் சகல செயலமர்வுகளையும் உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் பொன்னுத்துறை உதயரூபன் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திரு. ஐ.கே.வி.முத்துபன்டாரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்துத்தெரரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் மாணவர்களின் பாதுகாப்பிலும் பாடசாலைகளில் சுகுமான சூழ்நிலையொன்றை ஏற்படுத்துவதற்கும் கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள சுமார் 50 க்கு மேற்பட்ட ஆசியர்களை பாட ரீதியாக தினமும் அழைத்து செயலமர்வுகளை நடாத்துவதை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞயிற்றுக்கிழமை நடைபெற்ற துயர சம்பவத்தின் போது மட்;டக்களப்பு கல்வி வலயத்தின் பல மாணவர்கள் மரணித்திருப்பதோடு பல மாணவர்கள் காயப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பதினால் கடும் மன உளச்சலுக்கு மத்தியில் குறிக்கப்பட்ட சில பாடசாலைகளின் ஆசிரியர்கள் கடமையாற்றிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இவ் ஆசிரியர்களை செயலமர்வுகளுக்கு அழைத்திருப்பது தொடர்பாக பக்க சார்பற்ற விசாரணையொன்றை கல்வியமைச்சு நடாத்த வேண்டும்.
நாட்டில் அவசர கால நிலைமை பிரகடணப்படுத்தியுள்ள இவ்வேளையில் இவ்ஆசிரியர்களின் பாதுகாப்பு தொடர்பாக மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் கவணம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளர். மேலும் புதன் கிழமை பொது மக்கள் தினமாகயால் நிருவாக கடமைகளில் அர்ப்;பணிப்புடன் ஈடுபட வேண்டிய மட்டக்களப்பு கல்வி வலய அதிகரிகள் செயலமர்வுகளில் கலந்து கொண்டமை தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் பொறுப்பு கூறல் வேண்டும் எனவும் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மட்டக்களப்பு கல்வி வலயம் நடைபெற்ற கல்வி பொதுத்தராத சாதாரண பரீட்சையில் தேசிய ரீதியல் பின்னோக்கி 55வது நிலையை அடைந்திருப்பதோடு, கடந்த உயர்தர பரீட்சைப் பெறு பேறுகளிலும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. மட்;டக்களப்பு கல்வி வலயத்தில் மேலதிக ஆளணியர்களாக கல்வி அதிகாரிகள் கடமையில் இருந்தும் விணைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாகவும் நிர்வக குழப்பங்கள் காரணமாகவும் கல்வி வீழ்ச்சியடைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
0 Comments